Wednesday, 28 May 2014

வரங்கள்........

எல்லோருக்கும் நிழல் தரும் குடை,
எனக்கு மட்டும் வெயில் தருகிறது,
எல்லோருக்கும் மழை தரும் வானம்,
எனக்கு மட்டும் கண்ணிர் தருகிறது,
எல்லோருக்கும் இனிமை தரும் பசுமையான நினைவுகள்,
எனக்கு மட்டும் சுமையை தருகிறது,
எல்லோரையும் சுகமாய் வருடும் தென்றல் காற்று,
என்னை மட்டும் சுடுகிறது,
இன்னும் எனக்காக என்ன என்ன வரங்கள் உண்டோ...??
நீ இல்லாத என் வாழ்க்கையில்...??

No comments: