Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts
Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts

Monday, 16 June 2014

Tamil quotes

தன் அழகை திமிராகக் காட்டாமல் ஆண்களை மதித்து நடக்கும் போது தான் பெண் அழகானவள் ஆகிறாள் ஆண்களின் கண்களுக்கு....!!



Saturday, 14 June 2014

கரை சேர்வேனோ???


காதல் ஒரு காகித கப்பல் பயணம் அதில்
கரை சேர்ந்தவர்கள் சிலர்....
முழ்கி முச்சு முடியவர்கள் பலர் அதில்
உன்னால் நானும் ஒருவன்......

Friday, 13 June 2014

நினைவுகளுடன்....

செடிகள் வருந்துவதில்லை, பூக்கள் உதிர்வதை பார்த்து
மறுநாள்,
பூக்கும் என்ற நம்பிக்கையில் !!
நானும் வருந்தவில்லை,
நீ என்னை பிரிந்து சென்றதை நினைத்து ,
என்னை புரிந்து,
திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில் !!
என்றும் உன் நினைவுகளுடன்....

Thursday, 12 June 2014

குழப்பங்கள்......

அவள் பேசமாட்டால் என்று
மூளை சொல்லும்....
இல்லை
அவள் பேசுவாள் என்று
இதயம் சொல்லும்.....
குழப்பங்கள் உன்னை தெளிவாய்
குழப்பும்.....
காத்திருப்பாய் காலம் அவளிடம் உன் காதலை உணர்த்தும் வரை.....
இறுதியில் நீ அழுகிறாய் என்று
உன்  கண்ணிர் சொல்லும்...
காதல் எதுவும் செய்யும்......

Tuesday, 10 June 2014

உன் வருகைகாக...!!

நீ விட்டு சென்ற இடத்திலேயே காத்துகிடகிறோம்,
நானும்,
என் காதலும்.
உன் வருகைகாக...!!

Monday, 9 June 2014

வெறுக்க முடியாமல் தவிக்கிறேன்.....!

நீ ஏற்பாடுத்தி சென்ற வலியும்,காயங்களும் என்னுல் அதிகம்,
அதை சுகமான உன் நினைவுகளுடன் அசைபோடுகிறேன்...
அதனால் தான்....?
ஏனோ என்னால் உன்னை வெறுக்க முடியாமல் தவிக்கிறேன்.....!

கோழை (வீரன்)

நீ பிரிந்து சென்றதால் 
தற்கொலை செய்யும் அளவுக்கு 
நான் ஒன்றும் கோழை (வீரன்) இல்லை,
நீ ஏற்பாடுத்தி சென்ற காயங்களுடனும்,ரணங்களுடனும் வாழ்வேன், 
என்று முடியும் இந்த வாழ்க்கை 
என்ற ஏக்கத்துடன்....

Sunday, 8 June 2014

ஹைக்கூ கவிதைகள்.......

நெடுநாட்களாய் அவளின் நினைவுகளின் வாசம்,
இதயக் கூட்டின் ஒவ்வொரு துகளிலும்
வீசிக்கொண்டுகிறது.........




என்னை தேடி வந்த உன்னை தொலைத்துவிட்டு.... 
தேடி அழைகிறேன் என்னை....!!!!




நாம் இருவரும்......
இனைந்து தொடங்கி பாதியில் விட்டு சென்ற 
""ஓவியம்""
 நாம் காதல்.....!!!

விடைக்கான விடியல்.....

பல நாள் மௌனம்
உன்னை பார்க்காமல்...
சில நாள் துன்பம்
உன்னை நேசித்ததால்..
விடுகதையான வாழ்க்கை
விடை கிடைக்காமல் நான்...
விடை செல்வாய் என்ற
ஏக்கத்துடனே தொடங்குகிறேன்.......
ஒவ்வொரு விடியலையும்....

Saturday, 7 June 2014

(சு)வடுக்களாய்....

தொலைதூர வெளிச்சமாய்,
நெஞ்த்தின் சுவரொத்தில்,
நீங்கா (சு)வடுக்களாய்....
அவளின் நினைவுகள்..

தூர தேசப் பயணம்........

வாழ்க்கையெனும் தூர தேசப் பயணத்தில்,
பல இனிமையான தருணங்களை கண்டதும் உண்டு,
பற்பல தடை கற்களையும் கடந்து வந்ததும் உண்டு,
ஆனால்...???
நீ இல்லாமல் போகும் தருணங்களில் உணரும் வெறுமையான நிமிடங்களை...!!!
கடந்து வருவது தான் மிக சவாலாக உள்ளது.....

Thursday, 29 May 2014

வெறுக்கிறேன்.......



ஒரு கோட்டில் பயணித்து கொண்டிருந்த நாம்,
இரு கோடாய் பயணம் தொடங்கிய நாட்கள் முதல்,
நீ என்னை விட்டு விலகிச் செல்வதை புரிந்துகொண்டு,
என் நிழலும் என்னோடு பயணிப்பதை வெறுக்கிறது,

உண்மையாய் இரு.......!!!

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட ஏமாந்து விட்டேன் என்ற கவலை தான்
என்னை தினம் தினம் கொல்கிறது. !
உண்மையான அன்புக்கு உன்னிடம்
இடம் இல்லை...
பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை அதனால் தான் கூறுகிறேன்
இனியாவது உண்மையாய் நடந்து கொள் என்னிடம் அல்ல ...
இனிமேல் உன்னுடன் இருக்கப் போகிறவர்களிடம்...!

Wednesday, 28 May 2014

Tamil Photo Kavithaikal Collections








வரங்கள்........

எல்லோருக்கும் நிழல் தரும் குடை,
எனக்கு மட்டும் வெயில் தருகிறது,
எல்லோருக்கும் மழை தரும் வானம்,
எனக்கு மட்டும் கண்ணிர் தருகிறது,
எல்லோருக்கும் இனிமை தரும் பசுமையான நினைவுகள்,
எனக்கு மட்டும் சுமையை தருகிறது,
எல்லோரையும் சுகமாய் வருடும் தென்றல் காற்று,
என்னை மட்டும் சுடுகிறது,
இன்னும் எனக்காக என்ன என்ன வரங்கள் உண்டோ...??
நீ இல்லாத என் வாழ்க்கையில்...??

Tuesday, 27 May 2014

கடந்த இரவுகள்....

வெறுமையான இரவுகள் ஒவ்வொன்றும்....??
அவளின் நினைவுகளுடன் கடந்து போகிறது என்னை.....!!!

உடனடி தேவை....!!!

படித்ததில் பிடித்தது..... 

நீதியைக் காக்கும் நீதிபதிகள், பேராசையில்லாக் கல்வியாளர்கள்,
சோரம் போகாத அதிகாரிகள்,
சிந்திக்கும் நல்ல மக்கள்,
உடனே தேவை.....!!!
விவரங்களுக்கு அனுகவும்
              இந்தியா....!!!!!

நீ எங்கே என் உயிரே...??

என் நாட்களின் ஒவ்வொரு நொடிகளிழும்
நீயே இருக்கிறாய்---!!!
என் கவிதையின் தொடக்கத்திழும்,முடிவிழும்
நீயே இருக்கிறாய்---!!!
என் கணவுகளிழும், கற்பனைகளிழும்
நீயே இருக்கிறாய்---!!!
நிழல் உலகில் எல்லாம் என்னோடு இருக்கும்
நீயே---!!!
நிஜ உலகில் என்னை தனிமையில் விட்டுவிட்டு எங்கே சென்றாய்....????
உன்னை தேடி அலைகிறேன் பித்தனாய்
நாம் பயணித்த தெருக்களில்....
நம்மை தழுவிய காதலுடன்..........

Monday, 26 May 2014

ஞாபகங்கள்*....!!!


மழைசாரலாய்...!!
என்னுல் பல
வர்ணஜாலங்களை
நிகழ்த்தி செல்கிறது
அவளின் *ஞாபகங்கள்*....!!!

Tamil Love Quotes.....

உருவமற்ற அன்பிற்காக இதயம் உள்ள பல உயிர்கள் ஏங்கும் ஏக்கம் தான்
**காதல்**


காதலித்து ஏமாந்தவர்களை விட
காதலிப்பதாக நினைத்து
ஏமாந்தவர்களே அதிகம்.....!!


ஒருவரை பற்றி தெரிந்து கொள்வதை விட
அவர்களை புரிந்துகொண்டால் தான்
"அன்பு" ஆயுள் வரை நீடிக்கும்..  


பறிக்கப்பட்ட பூக்களை விட
ஒருவரால் வெறுக்கப்பட்ட
மனமே.......
விரைவில் வாடும்.......!!!


அறை குறையாய் அருறுக்கபட்ட உயிறும்...
அன்பினால் ஏமாற்றபட்ட இதயமும் வலியல் துடிக்காமல் இருப்பதில்லை....


விதைத்தது அன்பாக இருந்தாலும்....!!!
விளைவது ...??
கண்ணிர் துளிகளே அனேக இடங்களில்.....