Thursday, 29 May 2014

வெறுக்கிறேன்.......



ஒரு கோட்டில் பயணித்து கொண்டிருந்த நாம்,
இரு கோடாய் பயணம் தொடங்கிய நாட்கள் முதல்,
நீ என்னை விட்டு விலகிச் செல்வதை புரிந்துகொண்டு,
என் நிழலும் என்னோடு பயணிப்பதை வெறுக்கிறது,

உண்மையாய் இரு.......!!!

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட ஏமாந்து விட்டேன் என்ற கவலை தான்
என்னை தினம் தினம் கொல்கிறது. !
உண்மையான அன்புக்கு உன்னிடம்
இடம் இல்லை...
பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை அதனால் தான் கூறுகிறேன்
இனியாவது உண்மையாய் நடந்து கொள் என்னிடம் அல்ல ...
இனிமேல் உன்னுடன் இருக்கப் போகிறவர்களிடம்...!

Wednesday, 28 May 2014

Tamil Photo Kavithaikal Collections








வரங்கள்........

எல்லோருக்கும் நிழல் தரும் குடை,
எனக்கு மட்டும் வெயில் தருகிறது,
எல்லோருக்கும் மழை தரும் வானம்,
எனக்கு மட்டும் கண்ணிர் தருகிறது,
எல்லோருக்கும் இனிமை தரும் பசுமையான நினைவுகள்,
எனக்கு மட்டும் சுமையை தருகிறது,
எல்லோரையும் சுகமாய் வருடும் தென்றல் காற்று,
என்னை மட்டும் சுடுகிறது,
இன்னும் எனக்காக என்ன என்ன வரங்கள் உண்டோ...??
நீ இல்லாத என் வாழ்க்கையில்...??

Tuesday, 27 May 2014

கடந்த இரவுகள்....

வெறுமையான இரவுகள் ஒவ்வொன்றும்....??
அவளின் நினைவுகளுடன் கடந்து போகிறது என்னை.....!!!

உடனடி தேவை....!!!

படித்ததில் பிடித்தது..... 

நீதியைக் காக்கும் நீதிபதிகள், பேராசையில்லாக் கல்வியாளர்கள்,
சோரம் போகாத அதிகாரிகள்,
சிந்திக்கும் நல்ல மக்கள்,
உடனே தேவை.....!!!
விவரங்களுக்கு அனுகவும்
              இந்தியா....!!!!!

நீ எங்கே என் உயிரே...??

என் நாட்களின் ஒவ்வொரு நொடிகளிழும்
நீயே இருக்கிறாய்---!!!
என் கவிதையின் தொடக்கத்திழும்,முடிவிழும்
நீயே இருக்கிறாய்---!!!
என் கணவுகளிழும், கற்பனைகளிழும்
நீயே இருக்கிறாய்---!!!
நிழல் உலகில் எல்லாம் என்னோடு இருக்கும்
நீயே---!!!
நிஜ உலகில் என்னை தனிமையில் விட்டுவிட்டு எங்கே சென்றாய்....????
உன்னை தேடி அலைகிறேன் பித்தனாய்
நாம் பயணித்த தெருக்களில்....
நம்மை தழுவிய காதலுடன்..........

Monday, 26 May 2014

ஞாபகங்கள்*....!!!


மழைசாரலாய்...!!
என்னுல் பல
வர்ணஜாலங்களை
நிகழ்த்தி செல்கிறது
அவளின் *ஞாபகங்கள்*....!!!

Tamil Love Quotes.....

உருவமற்ற அன்பிற்காக இதயம் உள்ள பல உயிர்கள் ஏங்கும் ஏக்கம் தான்
**காதல்**


காதலித்து ஏமாந்தவர்களை விட
காதலிப்பதாக நினைத்து
ஏமாந்தவர்களே அதிகம்.....!!


ஒருவரை பற்றி தெரிந்து கொள்வதை விட
அவர்களை புரிந்துகொண்டால் தான்
"அன்பு" ஆயுள் வரை நீடிக்கும்..  


பறிக்கப்பட்ட பூக்களை விட
ஒருவரால் வெறுக்கப்பட்ட
மனமே.......
விரைவில் வாடும்.......!!!


அறை குறையாய் அருறுக்கபட்ட உயிறும்...
அன்பினால் ஏமாற்றபட்ட இதயமும் வலியல் துடிக்காமல் இருப்பதில்லை....


விதைத்தது அன்பாக இருந்தாலும்....!!!
விளைவது ...??
கண்ணிர் துளிகளே அனேக இடங்களில்.....




Sunday, 25 May 2014

ஒற்றை வரி கவிதை.......


இரவில்,
நிலவின் ஒளியில்,
வீட்டுமுற்றத்தில்,
என்னவளை நினைத்து
கவிதை எழுத வார்த்தைகளை
தேடிய பொழுது...!!!
கிடைத்து அத்தனை வார்த்தைகளின் சேர்க்கையும்..???
யாரோ...?
எங்கேயோ...?
எழுதியதாய் தொன்றவோ
ஒற்றை வரியில் எழுதி முடித்தேன்....!!!
அவளின் பெயரை மட்டும்...

கடவுளும் கற்சிலையே......!!!

கடவுள் என்று ஒருவன் இருந்தால்...???
உன் மௌனத்தை கலைத்து.....
உன்னை என்னோடு பேசவைக்க சொல்....!???
அப்பொழுது நம்புகிறேன்....
கடவுள் என்று ஒருவன் உண்டு...!!!
அவனுக்கும் சக்தி உண்டு என்று....!!!
அதுவரை........
அவனும் எனக்கு முன்
வெறும் கற்சிலையே....!!!
உன்னை போல‌....!!!

Saturday, 24 May 2014

நன்றி உனக்கு.....

ஏக்கங்களும்,
ஏமாற்றமும்,
வேதனையும்,
காயங்களும்,
ஒருவனுக்குள் உள்ள கவியை வெளிவுலக்கு காட்டுகிறது,
நீ தந்த ஏமாற்றமும்,
உன்னால் உன்டான ஏக்கங்களும்,
நீ செய்த‌ காயங்களும்,
உன்னால் உன்டான வேதனையும்,
என்னை யார் என்று எனக்கு காட்டியது,
அதற்காக....!!!
உனக்கு பல்லாயிரம்  கோடி முத்தங்களுடன் நன்றிகள்....

காலங்கள் கடந்தாளும் காத்திருப்பேன்.......

நீ என்னை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு,
விலகி மௌனமாய் செல்வதான் முலம் நொடிக்கு நொடி..
மரண வேதனை தருகிறாய்.....
இதற்கு பதில்...??
கழுத்தை நீட்டு அறுக்க வேண்டும் என்று நீ கூறியிருந்தால்,
நீட்டி இருப்பேன்....!!!
ஒரு நொடி இன்பத்திற்காக‌,
நீ இப்படி மௌனமாய் விலகி சென்றால்....
விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா ...??
தொடருவேன் உன் காலடி தடங்களை காரணம் கிடைக்கும் வரை,
காத்திருப்பேன் காலங்கள் கடந்தாளும் அழியாத காதலுடன்.....
உன் மௌனம் கலையும் வரை...

நீ இல்லாத என் வாழ்க்கையில்......

உனக்கா காத்திருப்பதின் வலியை என்னவென்று சொல்வேன் தோழி....
கவிபாடும் குயிலும், கண்ணிர் வடிக்கிறது என்னை பார்த்து,
சுடும் வெயிலும், என்னை சுடுவதில்லை,
வீசூம் தென்றல் காற்றும்,என்னை விட்டு விலகிசெல்கிறது,
தனிமையும், வெறுமையும் என்னை ஆட்டி படைக்கிறது ,
எனது பகலும், இரவும், நீயாகவே இருக்கிறாய்,
உன்னை  தொடர்பு கொள்வது எப்படி
என்று தெரியாமல்???
தடுமறி தடம்புறளுகிறேன் என் வாழ்க்கையில்,
உன்னை தொடர்பு கொண்டு பேச சொல்கிறது முளை,
இல்லை
வேண்டாம் என்கின்றது மனது,
யார் சொல்வதை கேட்பது என்று புரியாமல்
வழி தவறி பயணிக்கிறேன் ,
ஏக்கமும், ஏமாற்றமுமாய் கரைகிறது என் நாட்கள்,
காத்திருப்பதின் சுகத்தை உணர செய்த நீயே...!!!
காத்திருப்பின் வலியையும் உணர செய்கிறாய்.....

Thursday, 22 May 2014

மௌனம் உணரப்படும் விதம்.....

சந்தோஷமான தருணங்களில் மௌனம் "சம்மதம்"
உண்மையானவர்கள் பிரியும் போது மௌனம் "துன்பம்".
நட்பில் மௌனம் "நம்பிக்கை"
காதலியின் மௌனம் "சித்ரவாதை"
தோல்வியில் மௌனம் "பொறுமை"
வெற்றியில் மௌனம் "அடக்கம்"
இறுதியில் மௌனம் "மரணம்"

இதயம் வலிக்கும் தருணம்........


பிறந்த போது அறியாத வலியும், 
இறக்கும் போது தெரியாத வலியும், 
 நீ என்னை கண்டும் காணமல்  மௌனமாய் விலகி போகும்..
தருணங்களில் தெரிந்து கொண்டேன்......

Tuesday, 20 May 2014

Broken Heart......

When time comes for u to give ur heart to someone,
make sure u select someone who will never break ur
heart,
Bcuz broken hearts
Never have spare parts. 

அனாதை.......

துயரத்தில் தோள் கொடுக்க என்னை சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தாலும்....
நீ இல்லை எனில் நானும் ஒரு
""அனாதை"" தான்

Monday, 19 May 2014

தொலைந்த நொடி...

எங்கேயோ தொலைந்து போகிறதாடி மனது!! 
உன் நினைவுகளுடன் 
உனக்காக காத்திருக்கும் நொடிகளில்......

அதித காதல்..............

நீ எனக்கு கிடைத்துவிடுவாய் என்கிற நம்பிக்கையை விட
நீ எனக்கு கிடைக்காமல் போய்விடுவாயோ
என்கிற பயத்தில்தான்
உன்னை அதிகம் காதலிக்கிறேன்...!
அது புரியாமல நீ என்னை இன்னும் இன்னும் பயபடும் படியாக நடக்கின்றாய்...!

வார்த்தைகள்.........

உன்னோடு பேசிக் கொண்டு இருக்கும் போது வராத வார்த்தைகள்,
கவிதையாய் பொழிகிறிது....!!!
தனிமையில் உன்னை நினைத்து கொண்டுயிருக்கும் பொழுதுகளில்.....

மரணம்.......



Charge இல்லாத Cell Phone போல தான்....!!!
நீ இல்லாத....!!!
என் வாழ்க்கையும் மெல்ல மெல்ல நினைவிலந்து கொண்டு இருக்கிறது....
தொடராதே என்னை விட்டு விலகிச் செல்வதை.....
தொட்டுவிடும் மரணம் என்னை....


Sunday, 18 May 2014

எங்கே சென்றாய்....????



உன் ஞாபங்கள் அனைத்தையும் என்னுல் விதைத்து விட்டு....
எங்கே சென்றாய் என் உயிரே...??
தவித்துக் கொண்டுயிருக்கிறேன்
நீ இல்லாமல் தனிமையில்.....

Tamil Picture Kavithaikal



நீயே யாவுமாக‌.......

உன்னை மறக்க முடிவு எடுத்து பலமுறை தோற்கிறேன்...!!??
ஏதோ ஒரு ருபத்தில்,
உன் ஞாபகங்கள் என்னுல் தீண்டபடுவதினால்....!!!!

சுவடுகள்.......!!!


நிழலாகிப் போன அவளின் நினைவுகள் இதயத்தில் சுவடுகளாக....
அதை ஸ்பரிசிக்கும்போது
ஏனோ சொல்ல முடியாத வலியுடன் ஒரு சுகம்.......!!!

வாடியது நான்..........!!!


வாடியது நீ சூடிய பூக்கள் மட்டும் அல்ல..?
நானும் தான்..!!
பூக்கள் வாடியதற்கு காரணம் அது உன் தலையில் இருந்ததால்,
நான் வாடியதற்கு காரணம் நீ என் மனதில் இருந்ததால்.......

ஹைக்கூ கவிதைகள்

காதல் சிறையில்
உன் நினைவுகளுடன்
கைதியாய்!!!




என் இதயம் எனும் இருட்டு  அறையில் வெளிச்சமாய் 
உன் நினைவுகள்.....




என் தனிமையின் ஒவ்வொரு நிமிடமும்,
உன் நினைவின் எல்லைக்குள் சிறைவைக்கபட்டுள்ளது.



புதிர்களின் புதையல்....


ஒரு திறவுகோல் இலாத பூட்டைப்போல
பதில்களின்றி பல கேள்விகள்
பூட்டியே கிடக்கிறது இதயத்தில்
புதிர்கள்  சுமக்கும்  அறையாய் !!!