Thursday, 19 June 2014

Tamil quotes Collections.....

மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைத்தாழும்
அதற்கு நாம் பொறுப்பல்ல,
ஆனால்....!!!
அவர்கள் நம்மை பற்றி எப்படி நினைக்க வேண்டும்,
என்பதற்க்கு முழுப் பொறுப்புமும் நம்முடையதே.....!!!




கனவும் கற்பனையும் நமக்கே 
சொந்தமான பொக்கிஷம் 
இதை யாரும் பார்க்கவும் முடியாது 
பறிக்கவும் முடியாது..




பறிக்கப்பட்ட பூக்களை விட
ஒருவரால் வெறுக்கப்பட்ட
மனமே.......
விரைவில் வாடும்.......!!!



Wednesday, 18 June 2014

காதல்னா என்ன...?????

காதல்னா என்ன...?????
ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...
அதனால நான் அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல...

Infatuation

ஒரு பொண்ண விட்டு நீங்க விலக கூடாதுன்னு மத்தவங்க நெனக்கிறாங்க ..
அதனால அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல...

compromise

நாம விலகி போயிட்டா அந்த பொண்ணு மனசு காயம் ஆயிடுமேனு
நீங்க அவள காதலிக்கிறேன்னு நெனச்சா, அது காதல் இல்ல..

Charity

எல் லா விஷயத்தையும் அவ கிட்ட பகிர்ந்துக்கிறேன்...
அதனால அவள நான் காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல...

Pure Friendship

ஆனா.... அவளோட துக்கங்கள் அவள விடவும் உங்கள அதிகமா பாதிச்சு
அவளுக்காக நீங்க கண்ணீர் விட்டா...


அது தான் காதல்...


வேற பொண்ணுங்க உங்கள கவர்ந்தாலும்...
எந்த காரணமும் இல்லாம நீங்க அவ கூடவே இருந்தீங்கன்னா ...

அது தாங்க தெய்வீக காதல்...!!!

Monday, 16 June 2014

Tamil quotes

தன் அழகை திமிராகக் காட்டாமல் ஆண்களை மதித்து நடக்கும் போது தான் பெண் அழகானவள் ஆகிறாள் ஆண்களின் கண்களுக்கு....!!



Saturday, 14 June 2014

கரை சேர்வேனோ???


காதல் ஒரு காகித கப்பல் பயணம் அதில்
கரை சேர்ந்தவர்கள் சிலர்....
முழ்கி முச்சு முடியவர்கள் பலர் அதில்
உன்னால் நானும் ஒருவன்......

Friday, 13 June 2014

நினைவுகளுடன்....

செடிகள் வருந்துவதில்லை, பூக்கள் உதிர்வதை பார்த்து
மறுநாள்,
பூக்கும் என்ற நம்பிக்கையில் !!
நானும் வருந்தவில்லை,
நீ என்னை பிரிந்து சென்றதை நினைத்து ,
என்னை புரிந்து,
திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில் !!
என்றும் உன் நினைவுகளுடன்....

Thursday, 12 June 2014

குழப்பங்கள்......

அவள் பேசமாட்டால் என்று
மூளை சொல்லும்....
இல்லை
அவள் பேசுவாள் என்று
இதயம் சொல்லும்.....
குழப்பங்கள் உன்னை தெளிவாய்
குழப்பும்.....
காத்திருப்பாய் காலம் அவளிடம் உன் காதலை உணர்த்தும் வரை.....
இறுதியில் நீ அழுகிறாய் என்று
உன்  கண்ணிர் சொல்லும்...
காதல் எதுவும் செய்யும்......

Wednesday, 11 June 2014

நகைச்சுவைகளை பகிர்வோம் மகிழ்வோம்.

புன்னகையே இறைவன் மனிதனுக்கு அளித்த கொடை,நகைச்சுவைகளை
பகிர்வோம் மகிழ்வோம்.


1. மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.


2. டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?

ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.

3. என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?


இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.

4. தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி

செய்யலாமா..?

ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

5. நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...


நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?

6. கணவன் ; சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?


மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க...
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?

கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்...

7. உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!


என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!

8. டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்....

பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...

டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!


பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..

9. பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…


நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..

10. என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...

என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...