Thursday, 29 May 2014

வெறுக்கிறேன்.......



ஒரு கோட்டில் பயணித்து கொண்டிருந்த நாம்,
இரு கோடாய் பயணம் தொடங்கிய நாட்கள் முதல்,
நீ என்னை விட்டு விலகிச் செல்வதை புரிந்துகொண்டு,
என் நிழலும் என்னோடு பயணிப்பதை வெறுக்கிறது,

உண்மையாய் இரு.......!!!

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட ஏமாந்து விட்டேன் என்ற கவலை தான்
என்னை தினம் தினம் கொல்கிறது. !
உண்மையான அன்புக்கு உன்னிடம்
இடம் இல்லை...
பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை அதனால் தான் கூறுகிறேன்
இனியாவது உண்மையாய் நடந்து கொள் என்னிடம் அல்ல ...
இனிமேல் உன்னுடன் இருக்கப் போகிறவர்களிடம்...!

Wednesday, 28 May 2014

Tamil Photo Kavithaikal Collections








வரங்கள்........

எல்லோருக்கும் நிழல் தரும் குடை,
எனக்கு மட்டும் வெயில் தருகிறது,
எல்லோருக்கும் மழை தரும் வானம்,
எனக்கு மட்டும் கண்ணிர் தருகிறது,
எல்லோருக்கும் இனிமை தரும் பசுமையான நினைவுகள்,
எனக்கு மட்டும் சுமையை தருகிறது,
எல்லோரையும் சுகமாய் வருடும் தென்றல் காற்று,
என்னை மட்டும் சுடுகிறது,
இன்னும் எனக்காக என்ன என்ன வரங்கள் உண்டோ...??
நீ இல்லாத என் வாழ்க்கையில்...??

Tuesday, 27 May 2014

கடந்த இரவுகள்....

வெறுமையான இரவுகள் ஒவ்வொன்றும்....??
அவளின் நினைவுகளுடன் கடந்து போகிறது என்னை.....!!!

உடனடி தேவை....!!!

படித்ததில் பிடித்தது..... 

நீதியைக் காக்கும் நீதிபதிகள், பேராசையில்லாக் கல்வியாளர்கள்,
சோரம் போகாத அதிகாரிகள்,
சிந்திக்கும் நல்ல மக்கள்,
உடனே தேவை.....!!!
விவரங்களுக்கு அனுகவும்
              இந்தியா....!!!!!

நீ எங்கே என் உயிரே...??

என் நாட்களின் ஒவ்வொரு நொடிகளிழும்
நீயே இருக்கிறாய்---!!!
என் கவிதையின் தொடக்கத்திழும்,முடிவிழும்
நீயே இருக்கிறாய்---!!!
என் கணவுகளிழும், கற்பனைகளிழும்
நீயே இருக்கிறாய்---!!!
நிழல் உலகில் எல்லாம் என்னோடு இருக்கும்
நீயே---!!!
நிஜ உலகில் என்னை தனிமையில் விட்டுவிட்டு எங்கே சென்றாய்....????
உன்னை தேடி அலைகிறேன் பித்தனாய்
நாம் பயணித்த தெருக்களில்....
நம்மை தழுவிய காதலுடன்..........